தூண்டில் - சித்ரன் சிறுகதை வாசிப்பனுபவம்
காலையில் நண்பர் திருமழிசை ஆழ்வார் பாடலை அனுப்பி அந்த பாடல் உணர்த்தும் பக்தி உணர்வினை வியந்தோதி பேசிக் கொண்டிருந்தார்....
கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்
நானும் அந்தப் பாடலை வாசித்த போது பக்தியின் இனிமையை கண் கசிய உணர்ந்தேன்
பின்பு கனாத்திறமுரைத்த காதைகள் வாசிக்கலாம் என புத்தகத்தை எடுக்க அதில் காரைக்காலம்மையார் மற்றும் ஆண்டாளின் பாசுரங்கள் ....
கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே.
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே.
- காரைக்காலம்மை
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப்
புணர்வதோ ராசயி னால்என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்
தாவியை யாகுலஞ் செய்யும்
அங்குயி லே!.உனக் கென்ன மறைந்துறைவு
ஆழியும் சங்குமொண் தண்டும்
தங்கிய கையவ னைவரக் கூவில்நீ
சாலத் தருமம் பெறுதி
புணர்வதோ ராசயி னால்என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்
தாவியை யாகுலஞ் செய்யும்
அங்குயி லே!.உனக் கென்ன மறைந்துறைவு
ஆழியும் சங்குமொண் தண்டும்
தங்கிய கையவ னைவரக் கூவில்நீ
சாலத் தருமம் பெறுதி
- ஆண்டாள்
அதுவும் பக்திதான்... ஆனால் அதன் உணர்வு நிலை வேறொன்றாக இருக்கும்.... அதன் வீச்சினை ஒரு மாதிரி தாங்கவியலா வண்ணம் இருக்கும்.... ஆண்டாளின் பாசுரங்களை வாசிக்கும் பொழுதெல்லாம் அந்த நீல வண்ணனை ஒரு படி கீழே வைத்து தான் பார்க்க முடியும் என்னால்....... ஆனாலும் ஏதோ ஒரு மூலையில் ஆண்டாளின் உணர்வு நிலை பித்துக் கொள்ள வைக்கும் அளவு ஒரு மாதிரி புரிந்தும் புரியாமலும் இருக்கும்.. ... அதே போல்தான் தூண்டில் கதையில் வரும் பூனம் பாலின் உணர் வுகளை புரிந்து கொள்ள முடியல.... ஆனால் நடைமுறையில் இது ஒரு பிறழ்வுதான்... அந்த பிறழ்வை அவனுக்கு கடத்திய பட்சத்தில் ஒரு இடத்தில் அவள் ஆண்டாளாக எனக்கு தோன்றியது...
கருத்துகள்
கருத்துரையிடுக