இடுகைகள்

வேனிற் காலம்

படம்
இந்த ஆண்டு கோடை காலம் மிகக் கடுமையாகவே உள்ளது. வழக்கமாக இருப்பதை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கின்றன. ஆனாலும் இந்த கோடையையும் கூடுதலாக ரசிக்க பல விஷயங்கள் நடந்தேறின. இந்த கோடையின் ஆரம்ப நாட்களில் வெள்ளி மலைக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. பயணம் சற்றே சிரமமாக இருந்தாலும் இணை உள்ளங்களோடு  மலை வழிப் பயணம் என சுவராசியத்திற்கு குறைவில்லை.  வழக்கமாக வெள்ளி மலையில் காலை நடை செல்லும் பழக்கம் உண்டு. இந்த முறை அமுதா அவ்வூரில் உள்ள குளத்தங்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றார். சிறு சிறு குடியிருப்புகளை கடந்து சென்ற போது வெட்ட வெளியான மிகப் பெரிய நிலப்பரப்பு. விவாசய நிலம் சோளம் அறுவடை நடந்து முடிந்து காலியாக விடப்பட்ட நிலம் அதன் ஒரு பகுதியில் குளம் அதனோரத்தில் மிகப் பெரிய அரசமரம் அதனடியில் ஒரு பிள்ளையார் கோவில் . அந்த இடத்திற்கு போய்ச் சேரும் வரை மனதில் ஒன்றும் தோன்றவில்லை . அரசமரத்தடியில் நின்று வேனலின் விடியலில் அந்த நிலத்தின் முழுப் பரப்பையும் பார்த்த போது பொன்னென மினுங்கிக் கொண்டிருந்தன!.... தூரத்தில் குடியிருப்பில் எதையோ எரித்து கொண்டிருக்க அதில் புகையெழுந்து அ...

ஜே.ஜே. சில குறிப்புகள் வாசிப்பனுபவம்

சு.ரா. வின் ஜே.ஜே. சில குறிப்புகள் புத்தகம் மூன்று வருடங்களுக்கு முன் வாசித்தது..போன வருடம் சு.ராவின் கட்டுரை தொகுப்புகள் சிலவும், ஒரு புளியமரத்தின் கதை நாவலும்  வாசித்த பிறகு இந்த புத்தகத்தை மறுவாசிப்பு செய்யலாம் என்று எண்ணம்  எழுந்திருந்தது.  முதல் வாசிப்பில் சு. ரா. வின் கச்சிதமான மொழி நடையும் நாவல் முழுவதும் தெறித்திருக்கும் கூர்மையான சொற்பிரயோகங்களும் கையில் பென்சில் எடுத்திருந்தால்   அடி கோடிட்டு செல்ல வேண்டிய ஏராளமான வாக்கியங்களையும் கொண்ட ஒரு புத்தகமாக  நினைவில் இருந்தது. இன்று மீண்டும் வாசிக்கையில் அந்த உணர்வை சிறிதும் இழக்காமல் அதே புத்துணர்வோடு வாசிக்க முடிந்தது.  ஆனால் வாசிப்பின் வேகம் குறைந்திருந்தது. சில பாராக்களை மீண்டும் மீண்டும் வாசித்து லயித்து கொண்டிருந்தேன். சில பாராக்களை அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியாமல் தவித்தும் போயிருந்தேன் ஜே. ஜே. சில குறிப்புகள் வழக்கமான கதை சொல்லும் பாணியில் அமைந்த நாவல் அல்ல. இந்த நாவலை ஒரு வரியில் சொல்லுவது என்றால் பாலு என்கிற எழுத்தாளர் தன் ஆதர்ஷ மலையாள எழுத்தாளரான ஜே.ஜே. வை தமிழ் இலக்கிய உலகிற்கு அறிம...

மழைப்பாடல் -குறிப்புகள்

மண்ணில் ஒவ்வொரு உயிரும்  தன் தாகத்தை தணித்து கொள்ள விண்ணை நோக்கி இறைஞ்சி நிற்கின்றன. உயிர்களின் இறைஞ்சுதலுக்கு விண்ணவனும் அருளுகின்றான். அவன் அருள் தாகத்தை தணிக்கும் ஆனால் அது யாருக்கு, எப்போது, எங்கு என  அவன் மட்டுமே அறியும் ஆடலில் அல்லவா இருக்கிறது . பாரதவர்ஷமோ தன்னை ஆளப் போகும் பேரரசன் யார் என்ற தவிப்பில் இருக்க  குருதி மழை கொண்டு தன் தாகத்தை தணித்துக் கொள்ளுமோ எனும் அச்சத்தில் ஒவ்வொருவரும் வேண்டியும் , விலக்கியும் ஒரு அரசு சூழ்தலை  நிகழ்த்தி பார்க்கிறார்கள். மாந்தர்கள் தானியற்றிய சூழ்தலில்   சிக்கியும், உழன்றும், சில நேரங்களில் நிறைந்தும் , பின் கனிந்தும் விடுபடுகிறார்கள். ஆனாலும் இயற்கை அவ்வளவு எளிதில் தன் ஆடலை முடித்து கொள்வதில்லை தானே! அங்கு எப்போதும் மழை வேண்டி பாடும் தவளையின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன. தேவபாலபுரத்தில் பீஷ்மர் இருக்கையில் அஸ்தினபுரியில் இருந்து தூது வர கிளம்புகிறார். தொடர்ந்து அரண்மனைக்குள்  அரசியர்கள் இருவர்களுக்குள்ளும் மோதல்களும் கசப்புகளும் இருப்பதை உணர்ந்திருந்த  சத்யவதி திருதாவின் திருமணத்திற்கான  ம...

நிலவளம் - நட்ஹாம்சன் வாசிப்பனுபவம்

1920 ல் நட்ஹம்சன் (நார்வே )அவர்கள் எழுதிய நோபல் பரிசு பெற்ற நாவல் நிலவளம் (Growth of Soil) அடர்ந்த காட்டினை திருத்தி நிலத்தினை பண்படுத்தி வேளான்மை செய்து தன் வாழ்க்கையை தொடங்கிய ஒரு மனிதனின் கதை . காட்டாளன் போல் இருக்கும் ஐசக் கிராமம் நகரம் துறந்து காட்டில் தன் வாழ்க்கையை தொடங்கியவனுக்கு உதடு பிளந்த இங்கர் வாழ்க்கைத் துணையாக வர இருவரது உழைப்பினால் பெரிய பண்ணையை உருவாக்குகிறார்கள். பிள்ளைகள் பிறக்கிறார்கள். புதிதாக உருவாகிய பண்ணையை பார்வையிட வந்த அரசாங்க அதிகாரி நிலத்தினை ஐசக்கிற்கே உரிமை கொள்ள வழிநடத்துகிறான். அதிகாரி தற்செயலாக அந்நிலத்தின் கனிம வளத்தை கண்டறிந்து சுரங்கம் உருவாக்கவும் திட்டமிட்டு பின்னாட்களில் சுரங்கம் உருவாகி நாவல் முடிவில் பல்வேறு காரணங்களால் கைவிடப்படுகிறது. ஐசக்கின் பண்ணையும், கனிம வளமும் அந்நிலத்தை சுற்றி சில பண்ணைகளும், கடைகளும் என உருவாகி வருகிறது. மையக் கதாபத்திரமான ஐசக் கடுமையான உழைப்பாளியாக இருக்கிறான். தனது வேளாண் வாழ்க்கையிலும் ,உறவுகளிலும் எத்துனை சிக்கல்கள் வந்தாலும் மிகப் பொறுமையாக கையாள்கிறான் . அவனுக்கு மனதில் பல வித சங்கடங்கள் இருந்தாலும் எதனை...

முதற்கனல் (வெண்முரசு)வாசிப்பனுபவம்

 பிரபஞ்சம் உருவாக்கத்திற்னான முதற் கனல் தோன்றியதில் நாவல் தொடங்கி  நிகழவிருக்கும் பாரதப் போருக்கான முதற்கனல் எப்படி நிகழ்ந்தேறியது என சொல்லவிருக்கும் நாவலாக என நான் அவதானித்துக் கொண்டேன். மானசா தேவி தன் மகன் ஆஸ்திகனுக்கு தன் குலம் வழித்தோன்றல் கதையை கூறி மேலும் நாகர் குலத்தினை காக்கும் பொருட்டு மகனை அஸ்தினாபுரிக்கு பயணம் மேற்கொள்ளச் செய்கிறாள் . அஸ்தினாபுரி நிலத்திருந்து பாரதவர்ஷத்தின் கதை ஆரம்பிக்கிறது . சந்தனு சத்யவதி இணையர்கள் கதை ஆரம்பிக்கும் போதே நிமித்திகன் "தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது " என்கிறான். அவர்களுக்கு பிறக்கும் மகன்கள் சித்ராங்கதன் மற்றும் விசித்திர வீரியன். சித்ராங்கதன் அழகன். தன் இச்சையை தனக்குள்ளேயே நிகழ்த்திக் கொள்வதிலே நிறைவு கொள்பவன். அதனாலேயே நாட்டை ஆளக்கூடிய வல்லமை இருந்தும் அலையடிக்கும் மனதுடனே இருந்தான். திருமணம் ஆகியும் அந்தப்புரத்திற்குள் செல்லாதவன். வேட்டை விலங்கை அடைந்தே தீரும் நோக்குடன் கானகம் புகுந்த போது அங்கிருக்கும் சுனை ஒன்றில் வசிக்கும் சித்ராங்கதன் எனும் கந்தர்வனால் இழுக்கப்பட்டு விடுகிறான் விசித்திரவீரியன் பிறவி நோயாளியாக இர...

வாசித்த நூல்களின் பட்டியல் - 2025

 1. கார்கடல் - ஜெயமோகன் 2. குரு - ஹெச்.எஸ்.சிவபிரகாஷ் 3. வாழ்வின் அர்த்தம் - விக்டர் பிராங்கல் 4. பாஞ்சாலி சபதம் - சுப்பிரமணிய பாரதி 5. சிற்பக் கலை ஆய்வு அணுகுமுறைகள் - அம்பை மணிவண்ணன் 6. கோரா - தாகூர் 7. ஒளவிய நெஞ்சம் - அமலன் ஸ்டேன்லி 8. இயற்கை - எமர்சன் 9. நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் - ஜெயமோகன். 10. பிரம்ம சூத்திரம் - ஆசுதோஷானந்தர் 11. ஆரோக்கிய நிகேதனம் - தாரா சங்கர் பந்தோபாத்யாய 12. இருட்கனி - ஜெயமோகன் 13. ஆரம்பகட்ட முதலாளியமும், தமிழ்சமுதாயமும் - ராஜ் கெளதமன் 14. சொல்வளர்க்காடு - ஜெயமோகன் 15. தீயின் எடை - ஜெயமோகன் 16.  தத்துவத்தில் கனிதல் - நித்ய சைதன்ய யதி 17. ஆழ்நதியை தேடி - ஜெயமோகன் 18. இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும், அழிந்தனவும் - தேவி பிரசாத் சட்டோபாத்யாய 19. ஈஸாவாஸ்ய உபநிஷத் - ஓர் அனுபவம் - நித்ய சைத்தன்ய யதி 20. தலைமுறைகள் - நீல பத்மநாபன் 21. கிராதம் - ஜெயமோகன் 22. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி 23. காவியம் - ஜெயமோகன் 24. நீர்ச்சுடர் - ஜெயமோகன் 25. நீல நிழல் - ஜெயமோகன் 26 விஷ்ணுபுரம் - ஜெயமோகன் 27.   வாக்குமூலம் - வண்ணநிலவன் 28. களிற்று யா...

கவிதை

 நடை செல்லும் போது பாலத்தின் தடுப்பு சுவர்  மீது பயன்பாடற்ற அழுக்கான ஊனமுற்ற யானை பொம்மை எதிரில் வந்த பைத்தியம் ஒன்று பொம்மையை பார்த்து சிரித்தது அழுதது தலையில் குட்டிக் கொண்டு  உக்கியும் போட்டுக் கொண்டது குழந்தையால் கைவிடப்பட்ட பொம்மை ஒன்று பைத்தியத்திற்கு கடவுளாகி போனதோ!