வாழ்க்கை இதுதான் என அறுதியிட்டு கூற இயலாது என்பது நாம் அறிந்ததுதான். இந்நாவலில் வரும் கதை மாந்தர்கள் அதனை மீண்டும் நினைவுறுத்தி விட்டு சென்றது போல் இருந்தது. கதை களம் நிகழும் நிலம் எனக்கு புதியது என்றாலும் நிலபரப்பின் விவரணைகளும், ‘கதை மாந்தர்களின் வடிவமைப்பும் மிக அணுக்கமாக உணரச் செய்தது. நாவல் ஆரம்பித்த சில மணித் துளிகளிலே கணப்படுப்பு அருகே அமர்ந்து கதை கேட்க ஆரம்பித்து விடுகிறோம். நாவலின் செறிவான மொழி , தேர்ந்தெடுத்த சொற்சேர்க்கைகள் அந்நிலத்தினை விவரிக்கும் விவரணைகள், அம்மக்களின் உணர்வெழுச்சிகளை சொல்லிச் செல்லும் இடங்கள் வாசிப்பை இனிமையாக்கியது. கதையை தொடர்ந்து வாசிக்கும் போது ஒரு வித மன அழுத்தத்தை உணர்ந்தேன். கதை நிகழ்வுகள் அனைத்தும் புறச் சூழலோடு இணைந்து வரும் போது என் மனதிலும் கரு மேகங்கள் கவிழ்ந்தன… மழை பெருக்கெடுத்து ஊற்றியது…. பறவைகள் பாடின, பூக்கள் பூத்து குலுங்கின, இடி இடித்தது … பூகம்பம் நிகழ்ந்தது குன்றுகள் பிளந்தன … புறத்தையும் அகத்தையும் பிணைத்து எழுதிய ஆசிரியரின் சொற்கள் நாவலினுள் என்னை வாழச் செய்தது. ...
கருத்துகள்
கருத்துரையிடுக