இசை அனுபவம்
இசை என்பது காதால் கேட்டு ரசிக்க கூடிய ஒன்றாக மட்டுமே நினைத்து கொண்டிருந்தேன். ஜெ வை வாசிக்கத் தொடங்கி இசையில் மேலும் ஆர்வம் கொண்டு சாஸ்திரிய இசைகளை கேட்க ஆரம்பித்திருந்தேன். யுவன் நாவல் வழியாகவும், நாத சுக்கிரி குழுவின் மூலமும் இசையை கேட்பதற்கான சில நுட்பங்களை அறிந்து கொள்ள மேலும் ஆர்வம் மேலெழுந்து வந்தது. இதற்கிடையில் நண்பர் கணேஷின் இசை ரசனையும் என் ரசனையுடன் ஒத்துப் போக பல இசை வீடியோக்கள் பகிர்ந்து அவ்வப்போது கணேஷ் சின்ன சின்ன கமெண்ட்கள் எழுதி அனுப்புவார். அப்படியாக காதால் மட்டுமே கேட்டு ரசித்துக் கொண்டிருந்த இசையை மற்ற புலன்கள் வழியாகவும் ரசிக்க தொடங்கினேன். அப்படியாக புலன் அனைத்திற்கும் விருந்தளிக்கும் விதமாக ஒரு வீடியோ ஒன்று பார்த்தேன். ஜாகிரின் தபேலா விற்காக வீடியோ பார்க்க போய் ராகேஷின் குழலிசையில் மயங்கினேன். இருவரில் எவரைப் பார்ப்பது எவரை விடுவது எனத் திணறிப் போனேன். பொதுவாக கதக் நடனம் ஆடுபவரைக் காணும் போது தரையில் நடனமிடுகிறார்களா? இல்லை காற்றில் மிதந்து சுழல்கிறார்களா? என்று தோன்றும் ... அது போல ராகேஷின் உடல் முழுவதும் காற்றால் அடைக்கப்பட்டது போல தோன்ற ஆரம்பித்தது. பின் ஊதுபத்தியின் புகை மூட்டம் காற்றுக்கு அல்லாடுவது போல் அங்குமிங்குமாக பறந்து நெளிந்து குழலில் இசையாக வெளிவந்து கண், காது, மனம், உடல் என அனைத்தையும் தீண்டிச் சென்ற பேருணர்வு எழுந்து நம்மையும் மிதக்க வைக்க ஜாகிரின் விரலசைவோ என்னையும் கவனி, கவனி ... என்று இழுக்க...... மனதை பித்துக் கொள்ள வைத்தது...🥰🥰.... சில இடங்களில் பட்டாம்பூச்சி சிறகடித்து செல்லும் ஒரு தொடுகை உணர்வையும் .. நிகழ்த்தி செல்வதையும் உணர முடிந்தது.😊
https://youtu.be/400C2Fh6LQY?si=r6xYant-XaIhlOiz
கருத்துகள்
கருத்துரையிடுக