சிற்ப ரசனை குறிப்புகள் (பதாமி பயணம்)
ஸ்வத்திக ஸ்தானகத்தில் உமைபோடு நிற்கும் ரிஷபாந்திகர் ஸ்டைலுனா... ஊர்த்துவஜானில் நின்று பூவராகர் பூமகளை ஏந்தி நிற்கும் ஸ்டைலை ...என்னவென்று சொல்வது....
சதுர தாண்டவத்தில் தலைக்கு மேல் அரவத்தை ஏந்தி பதிணென் கைகளிலும் ஆயுதங்களையும், நிருத்த முத்திரைகளையும் கொண்டு ஆடும் பரமனின் அழகைச் சொல்வதா ! வாமன அவதாரத்தில் மூவுலகத்தையும் அளந்து நிற்கும் திரிவிக்கிரமனாகி ஓங்கி அளந்து நிற்கும் பேரழகை வியப்பதா ! இவர்களை யெல்லாம் ஓரங்கட்டும் விதமாக என் அம்மா கொற்றவை மகிஷாசுரமர்த்தினி எத்தனை எத்தனை அழகு கோலத்தில் .... மகிஷனை வீழ்த்தும் கம்பீர அழகின் முன்.... அத்தனை சிற்பங்களும் துவம்சமாகி விடாதா!!!... அவள் மகிஷனை கால் ஊணி பிடித்து வைத்திருக்கும் அழகென்ன! கத்தரி ஹஸ்தத்தில் அம்பெடுக்கும் ஸ்டைல் என்ன!... அட போங்கப்பா... பரமனாவது.... விஷ்ணு வாவது!...😀😀
பரமன் ஆலிங்கன ஹஸ்தத்தில் உமையை அணைத்து நின்று பிறையை எடுத்து தன் ஜடா மகுடத்தில் சூடிக் கொள்ள முற்பட்டு சந்திரசேகரனாகப் போகிறோம் என்றொரு பெருமிதப் பார்வையை உமையை நோக்கி வீச...... உமையும் .... "ம்ம்.... அழகன் தான் யா ... நீ... " என்று இடை ஒசிந்து நிற்கும் அழகை ..... அட ! அட! .... அட !
சிற்பத்திற்கு மேலே மயூர தோரணமும், அதற்கு மேலே யானை யிரண்டும் நீர் தெளித்து பொலிய செய்யும் கஜலெட்சுமி வீற்றிருக்க ..... அற்புதமான படைப்பு.. இது...
பிறை சூடிய சந்திர சேகரனை இதுவரை பல கோயில்களில் பார்த்திருக்கிறேன்... ஆனால் இந்த சிற்பத்தை செதுக்கிய சிற்பியின் கற்பனைத் திறனை நினைக்க நினைக்க... வியக்காமல் இருக்க முடியல.... எப்படி இப்படி ஒரு ஐடியா அவருக்கு வந்திருக்கும்...!
முதல் நாள் பதாமியில் பார்த்த குடைவரைகளிலெல்லாம் வாமனன் திரிவிக்கிரமனாக மூவுலகை அளக்க எத்தனிப்பது போல்தான் சிற்பங்கள் அமைந்திருக்கும். 3 வது நாள் பார்வையிட்ட பட்டடக் கல் கோவிலின் சுற்றுச் சுவரில் அமைந்த திரிவிக்கிரமர் மூவலகத்தையும் அளந்து முடித்த கோலமாக தோன்றியது... அந்த பெருமித சிரிப்பும் அவரே வியக்குமளவிற்கு விஸ்மய ஹஸ்தத்தையும் காட்டியிருப்பது மிக அழகு.
கருத்துகள்
கருத்துரையிடுக