குன்னக்குடி வைத்தியநாதன்

 இன்றைய  காலை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையோடு தொடங்கியது.

மோகன ராகத்தில் அமைந்த பாடலை இசைக்க ஆரம்பிக்க..... ராக ஆலாபனைையிலேயே உடல், பிரக்ஞை கடந்த ஆனந்த நிலைக்கு கொண்டு சென்றார். அதன் பிறகு ஆனந்த தாண்டவம்தான். அதுவும் இடையில் தந்தியை இழுத்து வாசிப்பதை நிறுத்தி தட்டி தட்டி வாசிச்சிருப்பார் னு நினைக்கிறேன்.... அந்தப் பகுதி அபாரமா இருந்தது... அது சீன இசையை போல் ஒலித்துக் கொண்டிருக்க எனது கோணல் புத்தி ஆனந்த தாண்டவமாடும் சிவபெருமான் போதி தருமரின் bgm கேட்டு திகைச்சிருப்பாரேன்னு எண்ணிக் கொண்டிருந்தது.

சீன இசை பென்டோனிக் அளவுகோலை அடிப்படையாகக் கொண்டது. மோகன ராகம் ஐந்து ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டது... ஆதலால் அது சீன இசையை ஒத்திருக்கும் என முன்பு ஒரு காணொளியில் பார்த்த நினைவு வந்து மீண்டும் இசையில் மூழ்கினேன் 

குன்னக்குடி வைத்தியநாதனை தூர்தர்ஷன் காலத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் இவருடைய முகபாவத்திற்காகவே பார்ப்பதுண்டு... போகப் போக வில்லினைக் கொண்டு தந்தியை மீட்டுகிறாரா... இல்லை அவர் உயிர் கொண்டு நம், உணர்வுகளை ஆழமாக தீண்டிச் செல்கிறாரா... என்ற நிலைக்கு என் சிந்தையை நகர்த்தி சென்றார். முதலமைச்சர் எம்ஜிஆர் இறந்த அன்று கண்ணீர் வழிய அவர் சோக கீதம் இசைத்துக் கொண்டிருந்த தினம் என் பால்ய காலத்து நினைவுகளில் ஒன்றாக பதிந்திருக்கிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பென்சாம்- வாசிப்பனுபவம்

கர்நாடகா பயணம் - 4

மார்க்கெட் நாட்கள்