பாரதி நினைவுகள் -யதுகிரி அம்மாள்
2024 ஆம் வருடம் அக்டோபர் மாதம் நூலகத்தில் இருந்து எடுத்து வந்த கா.நா.சு. வின் இலக்கிய விமர்சன கட்டுரை நூலின் பரிந்துரையின் காரணமாக யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் வாசிக்க விருப்பமாயிருந்தது.
கா.நா. சு. அவர்கள் பாரதி நினைவுகள் புத்தகத்தின் சில பகுதிகளையும் இணைத்திருந்தார். அதனை வாசித்த போது பாரதியை கண் முன் கொண்டு வந்த அம்மாளின் மொழிநடையே கவர்ந்திருந்தது. அதை தொடர்ந்து ஷீலா மைனியிடம் இந்த புத்தகத்தை வாங்கி வந்து நேற்று (12.1. 26 ) வாசிக்க ஆரம்பித்து இன்று காலை முடித்தேன்.
யதுகிரி அம்மாள் புதுச்சேரியில் வாழ்ந்த போது பாரதியுடனான உரையாடல்கள் வழியாக இந்த புத்தகம் விரிகிறது. 10 வருட பாரதியுடனான அவருடைய அனுபவம் சில காட்சி தொகுப்புகளாக ஒரு சிறுமியின் பாரதியை அணுக்கமாக அறிய வைக்கிறார். பாரதிக்கும் செல்லம்மாவிற்கும் உள்ள உறவு, அவருடைய நட்புகள், அவருடைய கவிதைகள் எழுந்து வந்த சூழல்கள், உணர்வு நிலைகள் மற்றும் குழந்தைகள், பெண்களிடத்தில் கொண்ட தனித்துவமான உரையாடல்கள், சிந்தனைகள் என பாரதியின் அன்றாடங்களிலிருந்தே நம்மால் உணரும் அளவிற்கான அழகிய மொழிநடை.
அதே போல் சிறுமியாக ஒரு கவிஞனின் அலைக்கழிப்பை புரிந்து கொள்ள இயலாத சூழலையும், மனநிலையையும் குறிப்பிடுகிறார். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பாரதியில் ஏற்படும் மௌனத்தை தன்னால் புரிந்து கொள்ள இயலாமல் கொண்ட தவிப்பையும் அறிய முடிகிறது. சிறுமியாய் பாரதியின் எழுச்சியை பார்த்து விட்ட யதுகிரி பாரதியின் மெளனம் தந்த தவிப்பை நமக்குமே கடத்தி விட்டிருக்கிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக