இடுகைகள்

குன்னக்குடி வைத்தியநாதன்

 இன்றைய  காலை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையோடு தொடங்கியது. மோகன ராகத்தில் அமைந்த பாடலை இசைக்க ஆரம்பிக்க..... ராக ஆலாபனைையிலேயே உடல், பிரக்ஞை கடந்த ஆனந்த நிலைக்கு கொண்டு சென்றார். அதன் பிறகு ஆனந்த தாண்டவம்தான். அதுவும் இடையில் தந்தியை இழுத்து வாசிப்பதை நிறுத்தி தட்டி தட்டி வாசிச்சிருப்பார் னு நினைக்கிறேன்.... அந்தப் பகுதி அபாரமா இருந்தது... அது சீன இசையை போல் ஒலித்துக் கொண்டிருக்க எனது கோணல் புத்தி ஆனந்த தாண்டவமாடும் சிவபெருமான் போதி தருமரின் bgm கேட்டு திகைச்சிருப்பாரேன்னு எண்ணிக் கொண்டிருந்தது. சீன இசை பென்டோனிக் அளவுகோலை அடிப்படையாகக் கொண்டது. மோகன ராகம் ஐந்து ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டது... ஆதலால் அது சீன இசையை ஒத்திருக்கும் என முன்பு ஒரு காணொளியில் பார்த்த நினைவு வந்து மீண்டும் இசையில் மூழ்கினேன்  குன்னக்குடி வைத்தியநாதனை தூர்தர்ஷன் காலத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் இவருடைய முகபாவத்திற்காகவே பார்ப்பதுண்டு... போகப் போக வில்லினைக் கொண்டு தந்தியை மீட்டுகிறாரா... இல்லை அவர் உயிர் கொண்டு நம், உணர்வுகளை ஆழமாக தீண்டிச் செல்கிறாரா... என...

சிற்ப ரசனை குறிப்புகள் (பதாமி பயணம்)

 ஸ்வத்திக ஸ்தானகத்தில் உமைபோடு நிற்கும் ரிஷபாந்திகர் ஸ்டைலுனா... ஊர்த்துவஜானில் நின்று பூவராகர் பூமகளை ஏந்தி நிற்கும் ஸ்டைலை ...என்னவென்று சொல்வது.... சதுர தாண்டவத்தில் தலைக்கு மேல் அரவத்தை ஏந்தி பதிணென் கைகளிலும் ஆயுதங்களையும், நிருத்த முத்திரைகளையும் கொண்டு ஆடும் பரமனின் அழகைச் சொல்வதா ! வாமன அவதாரத்தில் மூவுலகத்தையும் அளந்து நிற்கும் திரிவிக்கிரமனாகி ஓங்கி அளந்து நிற்கும் பேரழகை வியப்பதா ! இவர்களை யெல்லாம் ஓரங்கட்டும் விதமாக என் அம்மா கொற்றவை மகிஷாசுரமர்த்தினி எத்தனை எத்தனை அழகு கோலத்தில் ....  மகிஷனை வீழ்த்தும்  கம்பீர அழகின் முன்.... அத்தனை சிற்பங்களும் துவம்சமாகி விடாதா!!!... அவள் மகிஷனை கால் ஊணி பிடித்து வைத்திருக்கும் அழகென்ன! கத்தரி ஹஸ்தத்தில் அம்பெடுக்கும் ஸ்டைல் என்ன!... அட போங்கப்பா... பரமனாவது.... விஷ்ணு வாவது!...😀😀 பரமன் ஆலிங்கன ஹஸ்தத்தில் உமையை அணைத்து நின்று பிறையை எடுத்து தன் ஜடா மகுடத்தில் சூடிக் கொள்ள முற்பட்டு சந்திரசேகரனாகப் போகிறோம் என்றொரு பெருமிதப்  பார்வையை உமையை நோக்கி வீச...... உமையும் .... "ம்ம்.... அழகன் தான் யா ... நீ... " என்று இடை ஒச...

இசை அனுபவம்

இசை என்பது காதால் கேட்டு ரசிக்க கூடிய ஒன்றாக மட்டுமே நினைத்து கொண்டிருந்தேன். ஜெ வை வாசிக்கத் தொடங்கி இசையில் மேலும் ஆர்வம் கொண்டு சாஸ்திரிய இசைகளை கேட்க ஆரம்பித்திருந்தேன். யுவன் நாவல் வழியாகவும், நாத சுக்கிரி குழுவின் மூலமும் இசையை கேட்பதற்கான சில நுட்பங்களை அறிந்து கொள்ள மேலும் ஆர்வம் மேலெழுந்து வந்தது. இதற்கிடையில் நண்பர் கணேஷின் இசை ரசனையும் என் ரசனையுடன் ஒத்துப் போக பல இசை வீடியோக்கள் பகிர்ந்து அவ்வப்போது கணேஷ் சின்ன சின்ன கமெண்ட்கள் எழுதி அனுப்புவார். அப்படியாக காதால் மட்டுமே கேட்டு ரசித்துக் கொண்டிருந்த இசையை மற்ற புலன்கள் வழியாகவும் ரசிக்க தொடங்கினேன். அப்படியாக புலன் அனைத்திற்கும் விருந்தளிக்கும் விதமாக ஒரு வீடியோ ஒன்று பார்த்தேன். ஜாகிரின் தபேலா விற்காக வீடியோ பார்க்க போய் ராகேஷின் குழலிசையில் மயங்கினேன். இருவரில் எவரைப் பார்ப்பது எவரை விடுவது எனத் திணறிப் போனேன். பொதுவாக கதக் நடனம் ஆடுபவரைக் காணும் போது தரையில் நடனமிடுகிறார்களா? இல்லை காற்றில் மிதந்து சுழல்கிறார்களா? என்று தோன்றும் ... அது போல ராகேஷின் உடல் முழுவதும் காற்றால் அடைக்கப்பட்டது போல தோன்ற ஆரம்பித்தது. பின் ஊதுபத...

பறவை பார்த்தல் அனுபவம் - 3

 பறவை பார்த்தல் அனுபவம் நேற்று சுந்தரம் பார்க்கிற்கு பறவை பார்த்தலுக்காக செல்லலாம் என காலை நடை பயிற்சி போன போது ஒரு எண்ணம் வந்தது. சுந்தரம் பார்க் மதுரை வண்டியூர் கண்மாய் கரையோரம் அமைந்த பூங்கா. என் பால்ய காலத்தில் அங்கு படகு சவாரி சென்றிருக்கிறேன்.  சமீபமாக நடைபயிற்சி செல்லும் வழக்கம் மிகவும் குறைந்துள்ளதை எண்ணி மாலை பூங்காவிற்கு நடந்தே செல்லலாம் எனவும் திட்டமிட்டேன்.  சரியாக 4.30க்கு வீட்டிலிருந்து நடக்க ஆரம்பித்தேன். சுந்தரம் பார்க் என் வீட்டிலிருந்து 3. கி.மீ தொலைவில் உள்ளது. பள்ளி, அலுவலகம் நேரம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் மக்களின் கூட்டத்தை பார்த்துக் கொண்டே 5 மணி வாக்கில் பூங்காவை வந்தடைந்தேன். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்காவை மேம்படுத்தும் புணரமைப்பு பணி நடந்து கொண்டிருந்தது. பூங்காவிற்குள்  நுழையும் இடம் தூசு மண்டலமாக இருந்தது… அதற்குள் புகுந்து சென்ற போது. இயக்குநர் ராதா மோகனின் படம் ஒன்றில் ஹீரோ ஹீரோயினியை  கொசு மருந்து  புகை நடுவே நடந்து வருவதை தேவலோக தேவதை வருவது போல நினைத்து கொள்வார், அதே போல் நானும் புகை மண்டலத்திற்குள அமைந்துள்ள...

பறவை பார்த்தல் அனுபவம் - 2

இன்று வழக்கம் போல் நடைபயிற்சி சென்று திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில் பறவைகளை பார்த்தபடி மெதுவாக நடந்து கொண்டிருந்தேன். பெரும்பாலும் முன்பே அடையாளம் கண்டடைந்த பறவைகள்தான். மீண்டும் அதன் பெயர்களை நினைவில் மீட்டி சரி பார்த்து கொண்டேன் ... இது வரை நான் பார்த்தில் என்னை கவர்ந்தவை செம்போத்தும், கார் வெண் மீன்கொத்தியும் . நான் பார்த்ததில் பல பறவை இனங்கள் சிறு, பெருங் கூட்டமாகவே இருக்கும். சில பறவை இனங்களை  தனித்தே பார்த்திருக்கிறேன்.  அந்த வகையில் என்னை வெகுவாக கவர்ந்தது செம்போத்து பறவை. ஏனோ அதை நான் பார்த்த போது அப்பறவை ஆழ்நிலை தியானத்தில் அமர்ந்திருந்தது போலத் தோன்றியது. சில நேரங்களில் நான் ஒரே ஒரு பறவையை மட்டும் அவதானித்துக் கொண்டு சில நிமிடங்கள் நின்று பார்ப்பதுண்டு... அப்படி சொம்போத்தை கண்ட பொழுது அது எவ்வித அசைவுமின்றி அமர்ந்திருந்தது எனக்குள் ஒரு அமைதியை கொண்டு வர சட்டென எழுந்து சிறகு விரித்து பறந்த போது அத்தனை அழகு...! கருநிறமும், உறைந்த குருதி நிறமும் (கபில நிறம்)கொண்ட தன் சிறகை விரித்தெழுந்த போது அனலென காட்சி அளித்தது. அது கொண்ட மௌனமா ? இல்லை அந்நிறமா? எது எனக்கு அனலென காட...

தூண்டில் - சித்ரன் சிறுகதை வாசிப்பனுபவம்

காலையில் நண்பர் திருமழிசை ஆழ்வார் பாடலை அனுப்பி அந்த பாடல் உணர்த்தும் பக்தி உணர்வினை வியந்தோதி பேசிக் கொண்டிருந்தார்.... கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன் பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள் நானும் அந்தப் பாடலை வாசித்த போது பக்தியின் இனிமையை கண் கசிய உணர்ந்தேன்  பின்பு கனாத்திறமுரைத்த காதைகள் வாசிக்கலாம் என புத்தகத்தை எடுக்க அதில் காரைக்காலம்மையார் மற்றும் ஆண்டாளின் பாசுரங்கள் ....  கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப் பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய் தங்கி யலறி யுலறு காட்டில் தாழ்சடை எட்டுத் திசையும் வீசி அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள் அப்ப னிடந்திரு ஆலங் காடே. - காரைக்காலம்மை பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப் புணர்வதோ ராசயி னால்என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித் தாவியை யாகுலஞ் செய்யும் அங்குயி லே!.உனக் கென்ன மறைந்துறைவு ஆழியும் சங்குமொண் தண்டும் தங்கிய கையவ னைவரக் கூவில்நீ சாலத் தருமம் பெறுதி - ஆண்டாள் அதுவும் பக்திதான்... ஆனால் அதன் உணர்வு ந...

பறவை பார்த்தல் - ஒரு அனுபவம்

நான்  வைகை ஆற்றின் பக்கவாட்டில் அமைந்துள்ள ஒரு மேம்பாலம் வழியாகத்தான் நடை பயிற்சி செல்வேன். அங்கு நிறைய பறவை இனங்களை காண முடியும். நான்கு வருடங்களாக வெறுமனே பார்த்து கொண்டே செல்வேன். 10 நாட்களுக்கு முன்பு விஜய பாரதி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். பொங்கல் பறவை கணக்கெடுப்பில் விருப்பம் இருந்தால் இணையலாம் என... நானும் இணைகிறேன் எனச் சொல்லி e bird. செயலியை தரவிறக்கம் செய்து 2 நாட்கள் பறவை பார்த்தலுக்காக செல்ல ஆரம்பித்தேன்.... முதல் நாளே வியப்பாக இருந்தது. கூர்ந்து கவனிக்கும் போதே பறவைகளுக்கு இடையேயான சிறு சிறு நிறம் , அலகு, சிறகு, கால் என பல வேறுபாடு களை அறிய நேர்ந்தது. கூட்டம் கூட்டமாக திரியும் ஒரு இனத்திற்கு நடுவே தனித்து வேற்றினப் பறவையைக் காணும் போது சட்டென மனம் எச்சரிக்கை அடைந்து அதன் அடையாளம் கண்டடைய பறவை கையேட்டினில் தேடி அதன்  பெயரை அறிந்த பின்பு ஒரு பரவச நிலையை அடைவேன். என்னிடம் தற்சமயம் பைனாகுலர் இல்லை என்பதால் வெறும் கண்களால் கண்டு அடையாளம் காண்பது சற்று சிரமமாகத்தான் இருக்கிறது. இன்று பறவை பார்த்தலுக்காக இல்லாமல் வெறுமனே நடைபயிற்சிக்கு தான் சென்றேன். பனிக்காலம் என்பதா...