இடுகைகள்

குன்னக்குடி வைத்தியநாதன்

 இன்றைய  காலை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையோடு தொடங்கியது. மோகன ராகத்தில் அமைந்த பாடலை இசைக்க ஆரம்பிக்க..... ராக ஆலாபனைையிலேயே உடல், பிரக்ஞை கடந்த ஆனந்த நிலைக்கு கொண்டு சென்றார். அதன் பிறகு ஆனந்த தாண்டவம்தான். அதுவும் இடையில் தந்தியை இழுத்து வாசிப்பதை நிறுத்தி தட்டி தட்டி வாசிச்சிருப்பார் னு நினைக்கிறேன்.... அந்தப் பகுதி அபாரமா இருந்தது... அது சீன இசையை போல் ஒலித்துக் கொண்டிருக்க எனது கோணல் புத்தி ஆனந்த தாண்டவமாடும் சிவபெருமான் போதி தருமரின் bgm கேட்டு திகைச்சிருப்பாரேன்னு எண்ணிக் கொண்டிருந்தது. சீன இசை பென்டோனிக் அளவுகோலை அடிப்படையாகக் கொண்டது. மோகன ராகம் ஐந்து ஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்டது... ஆதலால் அது சீன இசையை ஒத்திருக்கும் என முன்பு ஒரு காணொளியில் பார்த்த நினைவு வந்து மீண்டும் இசையில் மூழ்கினேன்  குன்னக்குடி வைத்தியநாதனை தூர்தர்ஷன் காலத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் இவருடைய முகபாவத்திற்காகவே பார்ப்பதுண்டு... போகப் போக வில்லினைக் கொண்டு தந்தியை மீட்டுகிறாரா... இல்லை அவர் உயிர் கொண்டு நம், உணர்வுகளை ஆழமாக தீண்டிச் செல்கிறாரா... என...

இசை அனுபவம்

இசை என்பது காதால் கேட்டு ரசிக்க கூடிய ஒன்றாக மட்டுமே நினைத்து கொண்டிருந்தேன். ஜெ வை வாசிக்கத் தொடங்கி இசையில் மேலும் ஆர்வம் கொண்டு சாஸ்திரிய இசைகளை கேட்க ஆரம்பித்திருந்தேன். யுவன் நாவல் வழியாகவும், நாத சுக்கிரி குழுவின் மூலமும் இசையை கேட்பதற்கான சில நுட்பங்களை அறிந்து கொள்ள மேலும் ஆர்வம் மேலெழுந்து வந்தது. இதற்கிடையில் நண்பர் கணேஷின் இசை ரசனையும் என் ரசனையுடன் ஒத்துப் போக பல இசை வீடியோக்கள் பகிர்ந்து அவ்வப்போது கணேஷ் சின்ன சின்ன கமெண்ட்கள் எழுதி அனுப்புவார். அப்படியாக காதால் மட்டுமே கேட்டு ரசித்துக் கொண்டிருந்த இசையை மற்ற புலன்கள் வழியாகவும் ரசிக்க தொடங்கினேன். அப்படியாக புலன் அனைத்திற்கும் விருந்தளிக்கும் விதமாக ஒரு வீடியோ ஒன்று பார்த்தேன். ஜாகிரின் தபேலா விற்காக வீடியோ பார்க்க போய் ராகேஷின் குழலிசையில் மயங்கினேன். இருவரில் எவரைப் பார்ப்பது எவரை விடுவது எனத் திணறிப் போனேன். பொதுவாக கதக் நடனம் ஆடுபவரைக் காணும் போது தரையில் நடனமிடுகிறார்களா? இல்லை காற்றில் மிதந்து சுழல்கிறார்களா? என்று தோன்றும் ... அது போல ராகேஷின் உடல் முழுவதும் காற்றால் அடைக்கப்பட்டது போல தோன்ற ஆரம்பித்தது. பின் ஊதுபத...

பறவை பார்த்தல் அனுபவம் - 3

 பறவை பார்த்தல் அனுபவம் நேற்று சுந்தரம் பார்க்கிற்கு பறவை பார்த்தலுக்காக செல்லலாம் என காலை நடை பயிற்சி போன போது ஒரு எண்ணம் வந்தது. சுந்தரம் பார்க் மதுரை வண்டியூர் கண்மாய் கரையோரம் அமைந்த பூங்கா. என் பால்ய காலத்தில் அங்கு படகு சவாரி சென்றிருக்கிறேன்.  சமீபமாக நடைபயிற்சி செல்லும் வழக்கம் மிகவும் குறைந்துள்ளதை எண்ணி மாலை பூங்காவிற்கு நடந்தே செல்லலாம் எனவும் திட்டமிட்டேன்.  சரியாக 4.30க்கு வீட்டிலிருந்து நடக்க ஆரம்பித்தேன். சுந்தரம் பார்க் என் வீட்டிலிருந்து 3. கி.மீ தொலைவில் உள்ளது. பள்ளி, அலுவலகம் நேரம் முடிந்து வீட்டிற்கு திரும்பும் மக்களின் கூட்டத்தை பார்த்துக் கொண்டே 5 மணி வாக்கில் பூங்காவை வந்தடைந்தேன். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்காவை மேம்படுத்தும் புணரமைப்பு பணி நடந்து கொண்டிருந்தது. பூங்காவிற்குள்  நுழையும் இடம் தூசு மண்டலமாக இருந்தது… அதற்குள் புகுந்து சென்ற போது. இயக்குநர் ராதா மோகனின் படம் ஒன்றில் ஹீரோ ஹீரோயினியை  கொசு மருந்து  புகை நடுவே நடந்து வருவதை தேவலோக தேவதை வருவது போல நினைத்து கொள்வார், அதே போல் நானும் புகை மண்டலத்திற்குள அமைந்துள்ள...

பறவை பார்த்தல் - ஒரு அனுபவம்

நான்  வைகை ஆற்றின் பக்கவாட்டில் அமைந்துள்ள ஒரு மேம்பாலம் வழியாகத்தான் நடை பயிற்சி செல்வேன். அங்கு நிறைய பறவை இனங்களை காண முடியும். நான்கு வருடங்களாக வெறுமனே பார்த்து கொண்டே செல்வேன். 10 நாட்களுக்கு முன்பு விஜய பாரதி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். பொங்கல் பறவை கணக்கெடுப்பில் விருப்பம் இருந்தால் இணையலாம் என... நானும் இணைகிறேன் எனச் சொல்லி e bird. செயலியை தரவிறக்கம் செய்து 2 நாட்கள் பறவை பார்த்தலுக்காக செல்ல ஆரம்பித்தேன்.... முதல் நாளே வியப்பாக இருந்தது. கூர்ந்து கவனிக்கும் போதே பறவைகளுக்கு இடையேயான சிறு சிறு நிறம் , அலகு, சிறகு, கால் என பல வேறுபாடு களை அறிய நேர்ந்தது. கூட்டம் கூட்டமாக திரியும் ஒரு இனத்திற்கு நடுவே தனித்து வேற்றினப் பறவையைக் காணும் போது சட்டென மனம் எச்சரிக்கை அடைந்து அதன் அடையாளம் கண்டடைய பறவை கையேட்டினில் தேடி அதன்  பெயரை அறிந்த பின்பு ஒரு பரவச நிலையை அடைவேன். என்னிடம் தற்சமயம் பைனாகுலர் இல்லை என்பதால் வெறும் கண்களால் கண்டு அடையாளம் காண்பது சற்று சிரமமாகத்தான் இருக்கிறது. இன்று பறவை பார்த்தலுக்காக இல்லாமல் வெறுமனே நடைபயிற்சிக்கு தான் சென்றேன். பனிக்காலம் என்பதா...

கே.சச்சிதானந்தன் கவிதைகள்

எனக்கு கவிதை வாசிப்பு என்பது என்னவோ அவ்வளவு எளிதாக வசப்படுவதில்லை. கவிதையை வாசிக்கும் பொழுதெல்லாம் என்னுடைய வாசிப்பு போதாமையும், கூர்ந்த அவதானிப்பின்மையும் உணர்ந்து குற்ற உணர்விற்கே ஆளாகி விடுவதுண்டு. ஆனாலும் அவ்வப்பொழுது கவிதைகளை வாசிப்பதுண்டு.  இன்று விஷ்ணுபுர சிறப்பு விருந்தினராக  கவிஞர் கே. சச்சிதானந்தன் அவர்களின் அறிவிப்பை தளத்தில் கண்டு அவருடைய கவிதைகளை வாசித்து பார்க்கலாம் என சொல்வனம் இனணயதளத்தில் உள்ள இவரின் சில கவிதைகளை வாசித்தேன். முதல் வாசிப்பிலேயே இவருடைய கவிதை எனக்கு வசப்பட்டு விட்டதாக உணர்ந்தேன். இவருடைய கவிதைகள் நேரடியாகவே என் இதயத்தில் என்பதை விட மூளையில் ஒரு வலியும் இனிமையும் என   தீண்டிச் தீண்டிச் சென்றன. மறந்து வைத்த பொருட்கள் ஒரு மின்னல்வெட்டில் என் வாழ்வில் மறந்து வைத்த அனைத்துப் பொருட்களையும் நினைவுகூர்கிறேன் பளபளப்பான பத்து கோலிகள் மாமரத்தடியில் காய்ந்த இலைகளடியில் மறந்தவை, மழை வரத்தவறிய ஒரு நாளில் அபுவின் சலூனில் விட்டுவந்த குடை, கிராமத்துப் பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் முந்திரிமரம் ஏறுகையில் சட்டைப்பையிலிருந்து தாவிக்குதித்த...

கப்பல்காரனின் நாட்குறிப்புகள் - வாசிப்பனுபவம்

சிறந்த இலக்கியங்கள் பெரும் மனஉளைச்சலையும் , உளவியல் கேள்விகளையும் எழும்பச் செய்யும்.உங்கள் நாட்குறிப்புக்களும் அவ்வண்ணமே எனக்கு. உங்கள் பணி மிகவும் ஆபத்துக்கள்  நிறைந்த பணி என்று அறிந்திருந்த போதும் அதனை ஒரு அனுபவத் தொடராக நேரடிக் காட்சிகளாக எங்கள் முன் வைக்கும் போது மனம் அடையும் பதட்டத்தை என்னால் வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை. ஒவ்வொரு பணியும் அதற்கே உண்டான சவால்களை கொண்டிருந்தாலும் உங்களது பணி .உங்கள் அன்றாடத்தையே சாகசம் நிறைந்த ஒரு வாழ்க்கையாக்கி உள்ளது. இயந்திர அறையில்  கடும் வெப்பத்தில்  உங்களது உடைகள் வியர்வையில்  நனைய  பணி முடித்து தங்கும் அறைக்கு குளிக்கச் சென்றால் அங்கும் சுடுநீரில் குளியல். இதை வாசிக்கும் போது நிம்மதியான குளியல் கூட கப்பல்காரனுக்கு  கிடையாதா!  சில நேரங்களில் நன்னீர் சிக்கனம் காரணமாக அந்தக் குளியலுக்கும் பிரச்சினை....கடிகாரம் முன்னும் பின்னும் நகர தூக்கத்தில் பிரச்சினை.... கப்பல் கரையணைய தாமதித்தால் உணவுக்கும் தட்டுப்பாடு....இதுமட்டுமல்லாமல் இயற்கை சீற்றங்கள் வேறு... கப்பலில் நுழையும் கணம் நூலேணியில்  ஏறுவதிலிருந்து...

சிக்கந்தர் பாதுஷா தர்காவிற்கு ஒரு பயணம்

இந்த வருட புத்த பூர்ணிமா அன்று ஒரு அட்டகாசமான அனுபவம் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை.வழி தவறிய ஆட்டிற்கு ஆண்டவனின் தோளில் இடம் உண்டு எனச் சொல்லி கேட்டதுண்டு வழியே சரியாத் தெரியாத எங்களையும் ஆண்டவன் அவர் தோளில் ஏற்றிக் கொண்டதாக இருந்தது இப்பயணம். நான் வாசிக்கத் தொடங்கி 5 வருடமாகிறது. இதனைத் தொடர்ந்து என் வாழ்வில் புதிதாக இணைந்து கொண்ட உறவுகளும்,நட்புகளும் ஏராளம். வாசிக்கத் தொடங்கிய நாட்களில் என் வாசிப்பனுபவங்களை பகிர்ந்து கொள்ள இணை உள்ளங்கள்  இல்லாமல் ஏங்கி தவித்த காலத்தில் என் அத்தை மகள் ஷீலா மதினி வாசிப்பதை ஒரு திருமண வீட்டில் சந்தித்த போது அறிந்து கொண்டேன். ஆனாலும் நாங்கள் மிக அரிதாகவே வாசிப்பை  பகிர்ந்து கொண்டோம். நான் வெள்ளிமலைக்கு சென்று தத்துவ வகுப்பு மூலமாக அறிந்த நண்பர்கள் சுக்கிரி விவாதக் குழுவில் இணைந்து கதை விவாதிக்க என்று மதினியிடம் என் அனுபவங்களை கூறிய போது எங்கள் நட்பு நெருக்கமாக ஆரம்பித்தது. மதினிக்கு சிறு வயது முதலே பயணங்கள் மீது தீராத மோகம் கொண்டவர் என்பதைக் கூறினார். நானும் பொன்ராஜ் உடனான பயணங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டேன். அப்படியாக நானும் மதினியும...